அக்‌ஷய் குமாரின் மகரிஷி வால்மீகி போஸ்டர்.  படம்: எக்ஸ் / அக்‌ஷய் குமார்.
செய்திகள்

மகரிஷி வால்மீகி விடியோ: சர்ச்சைக்கு அக்‌ஷய் குமார் விளக்கம்!

மகரிஷி வால்மீகி விடியோ குறித்து அக்‌ஷய் குமார் பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அக்‌ஷய் குமார் தனது மகரிஷி வால்மீகி விடியோ போலியானது என விளக்கம் அளித்துள்ளார்.

தயவுசெய்து சரியா அல்லது போலியா என உறுதிப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுங்கள் என தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் (58 வயது) பயோபிக் படங்கள் நடித்து புகழ்ப்பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் மகரிஷி வால்மீகி எனும் படம் உருவாகி இருப்பதாகவும் டிரைலர் வரவிருப்பதாகவும் போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

சில வட இந்திய தொலக்காட்சி செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டன. ஆனால், அது ஏஐ மூலம் உருவாக்கியதென அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் கூறியுள்ளதாவது:

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட விடியோ ஒன்றில் நான் மகரிஷி வால்மீகியாக இருப்பதைப் பார்த்தேன்.

இந்த விடியோக்கள் எல்லாமே போலியானது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.

இது உண்மையானதா அல்லது எடிட் செய்யப்பட்டதா என்பதை சோதிக்காமலே சில செய்தி சேனல்கள் இதைச் செய்திகளாக வெளியிட்டுள்ளது மிகவும் மோசமானது.

இந்தக் காலத்தில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட விடியோக்கள் மிகுந்த வேகமாக பரவுகின்றன. தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுங்கள் என்றார்.

ஜாலி எல்எல்பி3 படம் கடந்த செப்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Akshay Kumar on Tuesday said a trailer that shows him as Maharishi Valmiki is fake and generated with the help of AI.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை!

ரஷியா - உக்ரைன் போர்: இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம் - அதிபர் டிரம்ப்

நேர்கொண்ட பர்வை... ஆஷ்னா ஜவேரி!

சூப்பர் 4: ஷாஹீன் ஷா அசத்தல்; 133 ரன்கள் எடுத்தது இலங்கை!

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT