இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான “பார்க்கிங்” திரைப்படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார்.
71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இன்று (செப். 23) தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகின்றது. இதில், விருது வென்ற திரைப்படக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில், “பார்க்கிங்” படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றார்.
மேலும், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளையும் “பார்க்கிங்” படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.