பாலிவுட்டில் வெளியான ‘12த் ஃபெயில்’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ராந்த் மாஸி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள், தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், இன்று (செப். 23) நடைபெற்று வருகின்றது. பல்வேறு திரைப்படக் கலைஞர்களுக்கும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில், இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவான ‘12த் ஃபெயில்’ படத்திற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் விக்ராந்த் மாஸி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றார்.
மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜவான் திரைப்படத்திற்காக, நடிகர் ஷாருக்கானும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன் லால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.