இசையமைப்பாளர் அனிருத்.  படம்: எக்ஸ் / அனிருத்
செய்திகள்

தாழ்மையுடனும் பெருமையுடனும்... கலைமாமணி விருது பற்றி அனிருத்!

கலைமாமணி விருது குறித்து அனிருத் கூறியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக அரசின் கலைமாமணி விருது குறித்து இசையமைப்பாளர் அனிருத் மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் இந்த விருதினை தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

தமிழின் உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்து தற்போது முக்கியமான இசையமைப்பாளராக தென்னிந்தியாவில் வலம் வருகிறார்.

தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் கலக்கினார்.

சமீபத்தில், 2021, 22, 23ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 2023-ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் அனிருத் பெயரும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அனிருத் கூறியதாவது:

மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது. என்றும் நன்றியுடன். அன்புடன், அனிருத் எனக் கூறியுள்ளார்.

Music composer Anirudh has posted a very emotional post about the Kalaimamani Award from the Tamil Nadu government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!

தவெக கொடி: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

987 வீடுகளை உரிமையாளர்களிடம் உரிய நேரத்தில் கட்டி ஒப்படைத்த அமர்பிரகாஷ்

SCROLL FOR NEXT