முகப்பு
செய்திகள்

ஜன நாயகனின் ராவண மவன்டா பாடல்!

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் 4 ஆவது பாடல் வெளியானது...

Updated On : 2 ஜனவரி, 2026 at 2:36 PM
பகிர்:

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் “ராவண மவன் டா” பாடல் வெளியானது.

நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவான “ஜன நாயகன்” திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

இந்தப் படத்தில், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் “தளபதி கச்சேரி”, “ஒரு பேரே வரலாறு” மற்றும் “செல்ல மகளே” போன்ற பாடல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் “ராவண மவன் டா” பாடல் இன்று (ஜன. 2) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெளியான லிரிக்கல் விடியோவில், பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் வரிகளுடன் மலேசியாவில் நடைபெற்ற இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

இத்துடன், “ஜன நாயகன்” திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜன. 3) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The song "Ravana Mavan Da" from actor Vijay's film 'Jana Nayagan' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments