முகப்பு
செய்திகள்

யஷ் பிறந்த நாளில் டாக்ஸிக் டிரைலர்?

டாக்ஸிக் டிரைலர் குறித்து...

Updated On : 4 ஜனவரி, 2026 at 3:52 PM
பகிர்:

டாக்ஸிக் திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’. கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

Advertisement

தற்போது வரை, நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட நடிகைகளின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் யஷ் பிறந்த நாளான ஜன. 8 ஆம் தேதி இப்படத்தின் டீசர் அல்லது டிரைலரை வெளியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் டாக்ஸிக் வருகிற மார்ச் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.