சின்மயி, மோகன் ஜி  
செய்திகள்

திரௌபதி - 2 சின்மயி பாடலை நீக்கிய மோகன். ஜி!

திரௌபதி - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற சின்மயி பாடலை நீக்கம்...

இணையதளச் செய்திப் பிரிவு

திரௌபதி - 2 படத்தில் சின்மயி பாடிய பாடலை நீக்கி வேறு பாடகியைப் பாட வைக்க இயக்குநர் மோகன். ஜி முடிவு செய்துள்ளார்.

இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி - 2 திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடலான எம்கோனே பாடலைச் சின்மயி பாடியிருந்தார்.

இதன் புரோமோ வெளியானதும் ரசிகர்கள், “பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர் மோகன். ஜி திரைப்படத்திற்கு ஏன் பாடினார்? எனக் கடுமையாக விமர்சித்தனர்.

இதனைக் கவனித்த சின்மயி, “இந்தப் பாடலைச் சுற்றியுள்ள விஷயங்களை நான் இப்போதுதான் அறிந்துகொள்கிறேன். முன்பே இதை அறிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் ஒருபோதும் இதில் இணைந்திருக்க மாட்டேன்.” என வருத்தம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, இயக்குநர் மோகன். ஜி, “என் திரைப்படத்தில் ஒரு கருத்து பதிவாகிறது என்றால், அது என்னுடைய சொந்தச் சிந்தனை மட்டும்தான். அதற்காக, நீங்கள் என்னைக் குறி வைக்கலாம். அதைவிடுத்து, என் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைத் தாக்குவது என்பது கோழைத்தனமானது” எனக் கூறினார்.

இந்த நிலையில், சின்மயி பாடிய அப்பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக மோகன். ஜி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி வெளியீடு! உறுதிசெய்தது படக்குழு!

”நுழைவுக் கட்டணமும் இல்லை! காரணம்..” சென்னை புத்தகக் காட்சி விழாவில் முதல் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகன் சென்சார் சர்ச்சைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? - கே.என். நேரு

இலங்கைக்கு 10 கடற்படை ஹெலிகாப்டர்களை வழங்கும் அமெரிக்கா!

பொங்கள் பரிசுத் தொகுப்பு: முதல்வர் தொடக்கி வைத்தார்! | செய்திகள் சில வரிகளில் | 08.01.26

SCROLL FOR NEXT