நடிகர் விஜய்  
செய்திகள்

ஜன நாயகன் வெளியாகுமா? 4 வாரம் அவகாசம் கேட்கும் தணிக்கை வாரியம்!

நீதிமன்றத்தில் ஜன நாயகன் சென்சார் வழக்கு நடைபெற்று வருகிறது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு எதிராக தணிக்கை வாரியம் வாதங்களை வைத்து வருகிறது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், உடனடியாக தணிக்கைச் சான்றிதழை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்தது.

வழக்கின் விசாரணை இன்று துவங்கியதும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா, “ஒரு திரைப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்தபின் ஏன் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்?” எனத் தணிக்கை வாரியத்திடம் கேட்டார்.

அதற்கு, தணிக்கை வாரியத் தரப்பு, “ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுத்த பின்பும் வழக்கு தொடுக்கலாம். இப்படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்துக்கு திருப்தி இல்லாததாலே மறுஆய்வுக்கு உட்படுத்துகிறோம். மறுஆய்வு குறித்து தயாரிப்பு தரப்பிடம் கடந்த ஜன. 5 ஆம் தேதியே கூறிவிட்டோம். மறுதணிக்கைக்கு அமைக்கப்பட்ட குழுவின் புதிய உறுப்பினர்களும் படத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்” எனக் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு! தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ஷாகித் கபூர் திரைப்படம்!

வார பலன்கள் - மேஷம்

குடையின்றி செல்ல வேண்டாம்: சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை தொடரும்!

SCROLL FOR NEXT