கானா வினோத், அவரின் மனைவி பாக்யா படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 9 : கானா வினோத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்துக்கு அவரின் மனைவி அளித்த இன்ப அதிர்ச்சி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்துக்கு அவரின் மனைவி பாக்யா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இசை வாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் நண்பர்கள் படை சூழ வினோத்தை அவரின் மனைவி வரவேற்றுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் உள்ளனர்.

டிக்கெட் டூ ஃபினாலே வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் அரோரா. பின்னர் கானா வினோத், சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், திவ்யா கணேசன் ஆகியோருடன் சேர்த்து 6 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வாகினர்.

பணப்பெட்டிக்கான போட்டிகள் முடிந்த நிலையில், இறுதிப்போட்டியாளர்களில் ஒருவராக இருந்த கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சான்ட்ரா வெளியேற்றப்பட்டார். தற்போது திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என 4 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும். இதில் அதிக வாக்குகளைப் பெறும் நபர் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்படும்.

கானா வினோத் பிக் பாஸ் வெற்றியாளராக மாறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தனக்கு ரூ. 18 லட்சமே போதும் என்று போட்டியில் இருந்து வெளியேறினார்.

கானா வினோத்

தனது குடும்பத்துக்கு இந்தத் தொகை மிகவும் அவசியம் என்றும், பசியோடு இருக்கும்போது பிரியாணி கிடைக்கட்டும் என காத்திருக்காமல், கஞ்சியோ கூழோ கிடைத்ததை வைத்து பசியாறிக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கானா வினோத்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கானா வினோத்துக்கு அவரின் மனைவி பாக்யா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கானா வினோத்

காரில் நட்சத்திர விடுதிக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு ஆடல், பாடல் என நண்பர்களுடன் சேர்ந்து கணவரை வரவேற்றுள்ளார். இதில் மனைவியுடன் சேர்ந்து கானா வினோத் நடனமாடினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

bigg boss 9 tamil gana vinoth dance with his wife baakiya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT