ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!
அதிக தொகைக்கு விற்கப்பட்ட டிமான்டி காலனி - 3 உரிமங்கள்.....
Updated On : 12 ஜனவரி, 2026 at 4:00 PM
டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் சாட்டிலைட் உரிமம் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி - 3 திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
Updated On : 12 ஜனவரி, 2026 at 4:07 PM
இந்த நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
மேலும், இதுவே அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.