இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியுடன் நடிகர்கள் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் Instagram
செய்திகள்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி பட வெளியீட்டுத் தேதி!

நடிகர் டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி” திரைப்பட வெளியீட்டுத் தேதி...

இணையதளச் செய்திப் பிரிவு

மலையாள நடிகர் டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பள்ளிச்சட்டம்பி”. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 1950 - 1960 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இன்று (ஜன. 20) படக்குழு அறிவித்துள்ளது.

இத்துடன், “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The release date for Malayalam actor Tovino Thomas's film "Pallichattambi" has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT