சிறை நாயகன் நடிக்கும் ராவடி!
சிறை படம் மூலம் கவனம் பெற்ற அக்ஷய் குமாரின் புதிய படம்...
சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்ஷய் குமாரின் புதிய பட டீசர் வெளியாகியுள்ளது.
சிறை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான தயாரிப்பாளர் லலித் குமார் மகன் எல்கே அக்ஷய் குமார் அடுத்ததாக ராவடி என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்க, லலித் குமார் தயாரித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதில், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபாசில் ஜோசஃப், சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ராவடி எனப் பெயரிட்ட இப்படத்தின் அறிமுக டீசரை வெளியிட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களின் சேட்டைகளும் நகைச்சுவை அடிதடிகளுமாக இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.
raawadi movie teaser out now
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.