நியூஸ் ரீல்

நடிப்புக்கு மேக்கப் அவசியம் இல்லையென்று சொன்னவர் அவர்! நடிகை ராணி முகர்ஜி நெகிழ்ச்சி!

ராணி முகர்ஜி என்றால் ஹே ராம் படம் தான் நினைவுக்கு வரும். தமிழ் திரை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத படமிது.

சினேகா

ராணி முகர்ஜி என்றால் ஹே ராம் படம் தான் நினைவுக்கு வரும். தமிழ் திரை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத படமிது. கமல்ஹாசன் இயக்கி நடித்த 'ஹேராம்' படம்தான் அவருக்கு கோலிவுட் அறிமுகப் படம். ராணி அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். 

அதில் பேசிய அவர் பேசுகையில் நடிகர் கமல் ஹாசன் பற்றி குறிப்பிட்டு பேசுகையில், 'என் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்திய படம் கமல் ஹாசனின் 'ஹேராம்'தான். படப்பிடிப்பின் போது, வழக்கம் போல மேக்கப்புடன் சென்றேன். அப்போது என்னை பார்த்த கமல், முகத்தை அலம்பி விட்டு வாருங்கள் என்றார். நான் என்னுடைய அறைக்கு சென்று மேக்கப்பை மட்டும் எடுத்து விட்டு வந்தேன். அப்போது பார்த்த அவர், மேக்கப்பை முழுமையாக நீக்கி விட்டு வாருங்கள், அதன் பிறகு முகத்தை கழுவி விட்டு வந்தேன். என் வாழ்க்கையில் மேக்கப் இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டது அது தான் முதல் தடவை. கமலுடன் நடிக்கும் போது தான் நடிப்பு என்றால் என்னவென்று உணர்ந்து தெரிந்து கொண்டேன். தவிர, நடிப்புக்கு மேக்கப் அவசியம் இல்லையென்று எனக்குப் புரிய வைத்தார் கமல் ஹாசன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT