நியூஸ் ரீல்

இப்போதான் தமிழ்ப்படம் 2 வெளியானது! அதற்குள் 3.0 அறிவிப்பா?

சென்னையில் மட்டும் கடந்த நாட்களில் ரூ. 4 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது தமிழ்படம் 2.

ராக்கி

சென்னையில் மட்டும் கடந்த நாட்களில் ரூ. 4 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது தமிழ்படம் 2. இந்தப் படத்துக்கு முதலில் தமிழ்படம் 2.0 என்று தான் தலைப்பு வைத்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இனி தமிழ்படம் 2  என்கிற பெயரிலேயே படம் வெளியிடப்படும் என்றனர். அவ்வாறே கடைக்குட்டி சிங்கம் வெளியான அன்று ரிலீஸ் ஆகியிருந்தாலும் வசூலில் அதற்கு சற்றும் சளைக்காமல் பரபரப்பாக ஓடுகிறது.

படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் இந்தப் படத்தின் சீக்வல் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். மேலும் ஒரு பேட்டியில் இயக்குநர் சி.எஸ். அமுதன், தமிழ் படம் 3.0 எடுக்கப்பட்டால் அதற்கும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என தெரிவித்திருந்தார். படத்தின் வெற்றி அதனை உறுதி செய்யலாம் என்கிறது படக்குழுவினர் தரப்பு. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT