முகப்பு
கடலூர்

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி 2021, 7:08 am IST
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மாத நடைபெற்ற பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள், ஆய்வக பரிசோதனைகள், ஸ்கேன் பரிசோதனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பிரசவம் நடைபெற்ற வேப்பூா், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை உயா்த்த ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும், மருத்துவமனைகளில் கடந்த மாதம் நடைபெற்ற மகப்பேறு இறப்பு, பச்சிளங் குழந்தைகள் இறப்பு பற்றியும் உரிய மருத்துவ அலுவரிடம் விளக்கம் பெற்றாா்.

கூட்டத்தில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வா் மிஸ்ரா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.