சிறப்புக் கட்டுரைகள்

பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தைகளைக் காக்க... பெற்றோர் அனுஷ்டிக்க வேண்டிய மூன்று நிபந்தனைகள்!

எந்தக் குழந்தையையும் பயமுறுத்தி தங்களது இஷ்டத்துக்குப் பணிய வைக்க எவருக்கும் உரிமை இல்லை. அப்படி எவரேனும் குழந்தையை தவறாக அணுகினால் அதை உடனே குழந்தைகள் பெற்றோரிடத்தில் தெரிவிக்குமாறு

RKV

பெற்றோரால் தாம் நிபந்தனையற்று நேசிக்கப்படுகிறோம் என்பது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நிபந்தனையற்ற நேசம் என்றால் என்ன? என்பதையும் குழந்தைகள் உணர்ந்திருக்க வேண்டும். குழந்தைகள் உணராத பட்சத்தில் நிபந்தனையற்ற/ நிபந்தனையுடன் கூடிய அன்பென்றால் என்ன? என்பதை விளக்கி அதைத் தெளிவாக உணர்த்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு.

தன்னை பயமுறுத்தவோ, அச்சுறுத்தவோ, காயப்படுத்தவோ எவருக்கும் உரிமையில்லை என்பதையும் குழந்தை அறிந்திருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மதத்தலைவர்கள், என அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எந்தக் குழந்தையையும் பயமுறுத்தி தங்களது இஷ்டத்துக்குப் பணிய வைக்க எவருக்கும் உரிமை இல்லை. அப்படி எவரேனும் குழந்தையை தவறாக அணுகினால் அதை உடனே குழந்தைகள் பெற்றோரிடத்தில் தெரிவிக்குமாறு குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

கடைசியாக, குழந்தைகள் எல்லாவற்றுக்கும் அஞ்சிக் கொண்டு அமைதி காப்பவர்களாக இருப்பது ஆபத்து. தனக்கு ஏதாவது ஆபத்து வந்து, தனியாகச் சமாளிக்க முடியாத பட்சத்தில், கத்தி ஊரைக்கூட்டும் தைரியம் ஆரம்பம் முதலே குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். கத்துவதோடு மட்டுமல்ல தன் பக்க நியாயத்தை உரக்கச் சொல்லி எதிர்த்துப் போராடும் தைரியமான மனப்பான்மையையும் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்த மூன்றும் அனுஷ்டிக்கப் படாததால் ஒரு எளிய சிறுமிக்கு நேர்ந்த கதியைக் அறிந்தால் இளகிய மனம் கொண்டவர்களுக்கு புத்தி பேதலித்துப் போய் இம்மாதிரியானவர்களின் மீது கொலைவெறி வரக்கூடும்.

எலிஸபெத்...

தனது 14 வயதில்... கடவுளின் அவதாரமாகத் தன்னைக் காட்டிக் கொண்ட மிட்ஸெல் எனும் ஒரு போலி மிருகத்திடம் சிக்கி, கடத்தப்பட்டு, பாலியல் அடிமையாக்கப் பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து ஆபாசப்படங்களைக் காணக் நிர்பந்திக்கப்பட்டு நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு மீண்ட அப்பாவிச் சிறுமி. இதில் கோரமான விஷயம் என்னவென்றால், விவரமறியா வயதில் இந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு மிட்ஸெல் எனும் அந்த கிழ மிருகத்தின் மனைவியும் உடந்தை. இருவருமாகச் சேர்ந்து தான் எலிஸபெத்தை பயமுறுத்திக் கடத்தியிருக்கிறார்கள். இந்தத் தகவல்களை எல்லாம் எலிஸபெத் தனது 30 வது வயதில் தான் பங்கு பெற்ற Reddit forum எனும் இணையதளத்தில் Ask me Anything எனும் வலைமன்றத்தில் போட்டுடைத்திருக்கிறார். 

எலிஸபெத்தை துஷ்பிரயோகம் செய்த மிட்ஸெல் @ இம்மானுவல் தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டாலும் தனக்கு நேர்ந்த கொடுமை இனியொரு குழந்தைக்கு நேர்ந்து விடக்கூடாது எனும் பரிதவிப்பில் மேற்கண்ட மூன்று முக்கியமான நிபந்தனைகளை எலிஸபெத் உலகப் பெற்றோரிடத்தில் விடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகத்தில் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை அறிய தினமொரு உதாரணமெனத்தான் நாளேடுகளில் வந்து குவிகின்றனவே... ஆயினும் அப்படியான துயரங்களுக்கு ஒரு முடிவே இல்லை என்பதாகத்தான் காலம் சென்று கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் பெற்றோர்களே!

Image courtesy: revolutionary parent.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமுளி அருகே தம்பதி மீது தாக்குதல்: கேரளத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேரூராட்சித் தலைவா் அச்சுறுத்துவதாகக் கூறி குடும்பத்துடன் இளநீா் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வீட்டு மாடியில் உண்ணாவிரதம் இருந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் கைது

SCROLL FOR NEXT