சிறப்புக் கட்டுரைகள்

பேரிடர் மேலாண்மை- புதிய அணுகுமுறை

திருச்செல்வம்

தமிழகத்தை சேர்ந்த தகவல் தொடர்பு தொழில் நுட்ப வல்லுனர்குழு கடந்த 17 வருடங்களாக தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை, கிராம அளவில் சிறு குறு விவசாயிகளும் பயன்படுத்தி அதிக மகசூல், தரம், நல்ல விலை, விவசாயத்தை எளிதாக செய்துகொள்ளக்கூடிய தன்மை போன்ற முக்கிய இலக்குகளை எளிதாக, சிறப்பாக செய்துகொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கி அதை அரசுடன் இணைந்து செயல்படுத்த முயன்று வருகிறது.

இந்த பின்னணியில், தற்போது தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையாக, சவாலாக இருந்து வரும் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை மக்கள் பங்களிப்போடு, குறுகிய காலத்தில் சரி செய்யக்கூடிய அணுகுமுறையை செயல்படுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த அணுகுமுறையை உருவாக்கியதற்கான  முக்கிய காரணங்கள்:

  1. ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக வரும் மனதை பாதிக்கக்கூடிய வகையில் வரும் செய்திகள், காணொளிகள்.
  2. தமிழகம் முழுவதும் துணிகள், உணவுப்பொருட்கள், நிதி சேகரித்தல் என பல்வேறு தனி நபர்கள் மற்றும் அமைப்புகளின் தீவிர முயற்சிகள் 

- போன்ற காரணிகள் இந்த அணுகுமுறையை உருவாக்க காரணமாகின.

 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவதில் உள்ள பிரச்சனைகள்...

  1. உடனடி தேவைகளான உணவு, குடிநீர், உடை, மருந்து பொருட்கள் எத்தனை மக்களுக்கு எவ்வளவு தேவை என்பதும் அவற்றில் எவ்வளவு உதவி பெறப்பட்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு தேவைப்படும்? என்கிற நேரலை தகவல்கள் பெறுவதற்கு அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் செயலி இல்லாதிருத்தல்.
  2. வழங்கும் உணவுப்பொருட்கள்,   துணிமணிகள், பணம் போன்றவை முறையாக பயனாளிகளுக்கு சென்றடைந்தததை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத நிலை.
  3. இதனால் பலருக்கு,  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய மனமிருந்தாலும், உதவியை செய்ய விரும்பாமல்/ முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது. 

மேற்கண்ட பிரச்சனைகளை நீக்கி சரியான திட்டமிடலுடன் கூடிய, நம்பகத்தன்மை மிகுந்த ஒரு தீர்வை உருவாக்கினால் சுமார் 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் பேரிடர்கள் ஏற்படும்போது  (தற்போது கஜா புயல்) மக்களின் நாட்டுப்பற்று மற்றும் மனித நேயத்துடன் கூடிய பங்களிப்போடு, தடைகள் இன்றி, குறிப்பாக  பணப்பிரச்னை  இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகளை விரைந்து வழங்கிடமுடியும்.

முன்வைக்கும் அணுகுமுறை:

கஜா பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்துதல்; கஜா பெயரில் வங்கிக்கணக்கு ஏற்படுத்துதல்;  தனிப்பட்ட இணையதளம் மற்றும் செயலி உருவாக்கி தேவைப்படும் உதவிகள் மற்றும் இதுவரை பெற்றிருக்கும் உதவிகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து பதிவுசெய்தல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உதவிகள் பற்றிய தகவல்களை, காணொளிகளை தொடர்ந்து பதிவுசெய்தல்.

இதன் மூலம் யார் உதவிசெய்ய விரும்பினாலும் ஒருங்கிணைப்பு மையம் அல்லது இணையதளச் செயலி மூலம் தற்போதைய தேவை மற்றும் மற்றும் பெறப்பட்டிருக்கும் உதவிகள் பற்றி அறிந்து, எந்த வகையில் தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்ப உதவி வழங்கும் முறையைப் பின்பற்றுதல்.

தேவைகளின் வகைகள்...

  1. உடனடி தேவைகளான உணவு, குடிநீர், உடை, மருந்து பொருட்கள் எத்தனை மக்களுக்கு எவ்வளவு தேவை என்கிற தகவல்கள் மற்றும் எவ்வளவு உதவி வந்திருக்கிறது, இன்னும் எவ்வளவு தேவை என்கிற தகவல்கள்.
     
  2. முற்றிலும் இழந்த மற்றும் சேதமான வீடுகளை சரி செய்வதற்கு தேவைப்படும் நிதி
     
  3. வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு வாழ்வாதராத்தை ஏற்படுத்தித்தருவதற்கு தேவைப்படும் உதவிகள் (மரக்கன்றுகள், விதைகள், உரங்கள், ஆடு, மாடு, கோழி, தையல் மெஷின் போன்றவை)
     

அணுகுமுறை வெற்றி பெறுவதற்கான காரணங்கள்:

நாம் செய்கிற  உதவி வீணாகாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகிறது என்கிற மன திருப்தி.

நாம் செய்த உதவி இணையதள தகவலாக பதிவாவது மற்றும் தேவைப்படும் உதவியின் அளவு குறைவது என்பது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, வீடு தொடர்பான தேவை 200  கோடிகள் என வைத்துக்கொள்வோம். ஒருவர் 1000 ரூபாய்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புகிறார் என்றால் தற்போதைய தேவை 199 கோடியே 99 லட்சத்து 99 ஆயிரம் என காட்டும்.  

எந்த வகையில் உதவி தேவைப்படுகிறது? என்பதை அறிந்து அதன்படி உதவி செய்தல். உதாரணத்திற்கு ஒருவர் தங்கள் வீட்டில் இருக்கும் துணிகளை வழங்க விரும்புகிறார் எனக்கொள்வோம், பேரிடர் ஒருங்கிணைப்பு மையம் வழியாகவோ, இணையதளம் அல்லது செயலி வழியாகவோ தேவைப்படும் துணிகள் உதவியாகப்பெறப்பட்டுவிட்டன என தெரிந்தால் அந்த துணிகளை விற்று அதில் கிடைக்கும் தொகையை வீடு அல்லது வாழ்வாதாரம் சார்ந்த தேவைகளுக்கான நிதிப் பிரிவிற்கு அனுப்ப முடியும்  (100 ரூபாயாக இருந்தாலும்). இது நீர், உணவுபொருட்கள் போன்றவைகளுக்கும் பொருந்தும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல இது மிகப்பெரும் நிதியாக சேரும்.

இந்த அணுகுமுறையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இதை செயல்படுத்துவற்கு எங்கள் ஒத்துழைப்பை தர காத்திருக்கின்றோம்.

பேரிடர் மேலாண்மையில் இந்த அணுகுமுறை புது பரிமாணத்தை ஏற்படுத்தும்.

தொடர்புக்கு: திருச்செல்வம் ராமு, 9840374266

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT