செம்மரங்களைக் காத்திடுவோம்!
கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திருப்பதி வனவிலங்கு மற்றும் வன நிர்வாக அலுவலர்கள் இருவர் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்கள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்து ஒரு லாரியை வழிமறித்தபோது செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தலையங்கம்செம்மரங்களைக் காத்திடுவோம்!
கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திருப்பதி வனவிலங்கு மற்றும் வன நிர்வாக அலுவலர்கள் இருவர் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்கள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்து ஒரு லாரியை வழிமறித்தபோது செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திருப்பதி வனவிலங்கு மற்றும் வன நிர்வாக அலுவலர்கள் இருவர் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்கள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்து ஒரு லாரியை வழிமறித்தபோது செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, செம்மரக் கடத்தல் மாஃபியாக்களைக் கண்டறிந்து புலன் விசாரணைச் செய்யும்படி சேஷாசலம் சிறப்பு ஆயுதப் படைக்கு அதிகாரம் வழங்கியதைத் தொடர்ந்து வேலூரில் கரகாட்டக்கார பெண் மோகனாம்பாள் சிக்கினார். இவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மாஃபியாக்கள் உள்ளனர்.
இப்புலன்விசாரணை மூலம் அறியக்கூடிய ஒரு துணுக்குறும் செய்தி, செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களில் ஏராளமானவர்கள் தமிழர்கள் என்பதுவே. இத் தமிழர்கள் பெரும்பாலும் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். செம்மரம் வெட்டிக் கடத்துவதில் நிபுணத்துவம் உள்ளவர்கள். 20 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 511 நபர்கள் கைது செய்யப்பட்டு 54 டன் செம்மரம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3,500 நபர்கள் கைது செய்யப்பட்டு கர்நூல், கடப்பா, குண்டூர், ஸ்ரீபிரகாசம், கோதாவரி மாவட்டச் சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன?
முதலில் செம்மரத்தின் புவியியல் விசாரணையை நடத்திவிட்டு பின்னர் புலன்விசாரணைக்குள் நுழையலாம். செம்மரத்தைச் செஞ்சந்தனம் என்று அழைக்க வேண்டும். பேச்சு வழக்கில் செஞ்சந்தனம் செம்மரம் என்றே வடக்குத் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் தங்க் நஹய்க்ங்ழ்ள் என்றும் தாவரவியல் மொழியில் டிரோ கார்ப்பஸ் சந்தலீனஸ் (Ptero Carpus Santalinus) என்றும் இது அழைக்கப்படுகிறது.
சந்தன மரத்திற்கும் செம்மரத்திற்கும் உள்ள ஒற்றுமை கனமும், பண மதிப்பும், மணமும். சந்தனம் மேற்குத் தொடர்ச்சி மலைக்குரிய மரம். செம்மரம் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குரிய மரம். ஆந்திர மாநிலம், கோதாவரியில் தொடங்கி பாலாறு பாயும் தமிழ்நாடு வரை இதன் தோற்ற மையத்தை அளவிட்டுள்ளார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆந்திராவில் கர்நூல், கடப்பா, குண்டூர், கோதாவரி, சித்தூர் மாவட்டங்களிலும் செம்மரங்கள் அதிகம் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளில் அரசியல் தலைவர்களைத் துணையாகக் கொண்டு திருவள்ளூர் - திருவண்ணாமலை - கொல்லிமலை வனப் பகுதிகளில் நன்கு விளைந்து முதிர்ந்த மரங்களை வெட்டிக் கடத்திக் காசாக்கி விட்டனர்.
இப்போது தமிழ்நாட்டில் உள்ளவை இளமரங்களே. முதிர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டாலும் திருவள்ளூர் - ஆந்திர மாநில எல்லையில் திருப்பதி சேஷாசல வனப்பகுதி நீள்வதால் பூண்டி நீர்த்தேக்கப் பூங்காவில் செம்மரங்களை நாம் காணமுடியும்.
பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட பெரிய நீர்த்தேக்கமே பூண்டி அணை. இப்பகுதியில் உள்ள செம்மரங்கள் வனத்துறைக்குச் சொந்தம். இதுபோல் இன்று தமிழ்நாட்டின் உள்பகுதியில் உள்ள தனியார் பண்ணைகளில் செம்மரங்கள் நிறைய உண்டு. செம்மரங்களின் மதிப்பைக் கேள்வியுற்றால், வாயைப் பிளக்க நேரிடும்.
உலகிலேயே அதிகப் பண மதிப்புள்ள மரமாக சந்தன மரம் விளங்கி வந்தது. செம்மரம் இரண்டாம் நிலையில் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. இன்று சந்தன மரம் கிலோ ரூ.800 என்றால் செம்மரம் கிலோ ரூ.1,500 முதல் 3,200 வரை.
காரணம், இது அனைத்துலகக் கடத்தல் மரம். நியாயமான ஏற்றுமதியில் உள்ள சட்டச் சிக்கலை மாஃபியாக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள்.
அனைத்துலக சந்தையில் 1 டன் செம்மரம் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலை போகிறது. செம்மரக் கடத்தலுக்குச் செம்மையாக ரூட்டுப் போட்டவர்கள் தமிழர்கள். சென்னைதான் மைய நகரம். சென்னையிலிருந்து மலேசியா - சிங்கப்பூருக்கு கடல்வழியில் கடத்தப்படுகிறதாம்.
மும்பை மற்றொரு மையம். ராயலசீமா - சேஷாசலக் காடுகளிலிருந்து தரைவழி மும்பை சென்று மும்பையிலிருந்து கடல் வழியே அரேபிய நாடுகளுக்கும், தரைவழியே நேபாளம் சென்று பின்னர் அங்கிருந்து சீனா - ஜப்பானுக்கும் தரைவழியே கடத்தல் செய்யப்படுவதாகச் செய்திகள் உண்டு.
இம்மரத்தை சீனர்களும் ஜப்பானியர்களும் "ஷமிசென்' என்ற வாத்தியம் செய்யப் பயன்படுவதாகவும், சீன - ஜப்பான் பண்பாட்டில் பெண்ணுக்கு வழங்கப்படும் மிக முக்கிய சீதனம் ஷமிசென் என்று சொல்லப்படுவதுடன் இந்த இசைக் கருவி செம்மரத்தைக் கொண்டே செய்யப்படுவதால் மன்னராட்சி காலத்திலிருந்தே தமிழ்நாட்டிலிருந்து செம்மரம் சென்றதாகவும் சொல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் திருப்பதி பொம்மைகள் செம்மரத்தில் செய்தார்கள். சீனாவிலும் புதுவித பொம்மைகளைச் செய்ய செம்மரம் பயன்படலாம். கடத்தலுக்குரிய அசலான காரணம் வேறு.
சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தனியார் அணு உலைகளில் அணுக்கதிர்களை வெளியேற விடாமல் தடுக்கும் அரண்களுக்கு செம்மரம் பயன்படுகிறது. செம்மரம் நாள்பட நாள்பட மேலும் மேலும் உறுதிபெற்று இரும்பைப் போல் கனமாகும். ஆனால் துருப்பிடிக்காது. கரையான் அரிக்காது.
செம்மரம் (அ) செஞ்சந்தனம் தக்காணப் பீடபூமிப் பகுதியின் அரிய தாவரம் என்று சைட்ஸ் என்று சொல்லப்படும் அரிய தாவரங்களின் அனைத்துலக வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதிவாகியதால் காடுகளில் இந்த செம்மரத்தை வெட்டுவது சர்வதேசக் குற்றம்.
இந்த சைட்ஸ் ஒப்பந்தம் காரணமாகவே சட்ட ரீதியாக வெட்டி ஏற்றுமதி செய்வதில் உள்ள சிக்கலை செம்மர மாஃபியாக்கள் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தி அன்னியத் தேவைக்காகக் கடத்தல் மூலம் விற்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் மாஃபியாக்களுக்கு வேலை செய்யும் தமிழர்கள் செம்மரம் வெட்டுவதற்குப் பெறும் வாரக் கூலி சுமார் 2 லட்ச ரூபாய். குறுக்கு வழியில் குபேரர்களாக ஆசைப்படும் தமிழர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. சிறைதண்டனை அவர்களுக்குப் பொருட்டு அல்ல. காரணம், வெளிவந்ததும் சொகுசு வாழ்க்கை உள்ளதே!
செம்மரம் என்பது தக்காணப் பீடபூமியின் தோற்றமே தவிர, இது அரிய தாவரம் அல்ல என்ற சான்றிதழ் தேவைப்படுகிறது. இதன் இருப்பு நிறைய உண்டு என்றும், முதிர்ந்துவிட்ட மரங்களை வெட்டுவதால் செம்மரம் அழிந்துவிடாது என்றும், ஏற்றுமதித் தேவையை விடப் பன்மடங்கு இருப்பு உள்ளன என்றும் "ஒருமுறை ஏற்றுமதி' என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிய ஆந்திர மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மைய அரசின் வனம் - சுற்றுச்சூழல் அமைச்சரகம் சைட்ஸ் அமைப்புக்கு விண்ணப்பிக்க தாமதம் ஆனதால், மாஃபியாக்கள் முந்திக் கொண்டனர்.
2012இல்தான் கோவையில் உள்ள வன மரபியல் - மர விதை ஆய்வுக் கூடத்திலிருந்து செம்மரம் அரிய வகை இல்லை என்று சான்றிதழ் பெற்றது. அதை சைட்ஸ் அமைப்புக்கு அனுப்பி "ஒருமுறை ஏற்றுமதி'க்கு அனுமதியும் பெறப்பட்டது.
ஆந்திர அரசு ஆண்டுக்கு 310 டன் செம்மர ஏற்றுமதிக்கு அனுமதியும் பெற்றது. ஆந்திரத்தில் உள்ள சேஷாசல ஆயுதக் காவல் படையினர் செம்மரம் வெட்டும் தமிழர்களைப் பிடிக்கும் வேட்டையும், மாஃபியாக்களைப் பிடிக்கும் வேட்டையும் தீவிரமாயுள்ள இன்றையச் சூழ்நிலையில் மோகனாம்பாளின் கூட்டம் பிடிபட்டுள்ளது.
அனைத்துலகச் சந்தையின் செம்மரத் தேவை ஆண்டுக்கு 3,000 டன் என்றும் இதுவரை ஆந்திர அரசு 1,000 டன் வரை ஏற்றுமதி செய்து விட்டாலும் அனைத்துலக சந்தைத் தேவை காரணமாக கடத்தலும் தொடரத்தான் செய்கிறது.
இருப்பினும் செம்மரம் (அ) செஞ்சந்தன மரப்பெருக்கத்திற்கு கோவை வன மரபியல் மரவிதை ஆராய்ச்சி நிலையம் தனிப்பட்ட விவசாயிகளுக்கும் செம்மர விதைகளை வழங்கி வருகிறது. தனியார் நர்சரிகளில் செம்மரக் கன்றுகள் கிடைக்கும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் செம்மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதில் தனிப்பட்ட விவசாயிகள் ஆர்வம் காண்பித்து வந்தனர்.
தஞ்சைக்கு அருகில் செங்கிப்பட்டியிலிருந்து கந்தர்வகோட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள கோவைப் பண்ணையில் ஆயிரக்கணக்கான செம்மரங்கள் உண்டு. 15 முதல் 20 ஆண்டு வளர்ச்சி பெற்ற மரங்கள் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளன.
எனினும் சேஷாசலக் காடுகளை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அணையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் உள்ள எல்லைப் பகுதியில் எஞ்சியுள்ள செம்மரங்களையும், திருவண்ணாமலை - கொல்லிமலைப் பகுதியின் முதிர்ந்த மரங்களையும் (எஞ்சியிருந்தால்) கணக்கு எடுத்துக் காப்பாற்றும் கடமை தமிழக அரசுக்கு உண்டு.
வரும் சந்ததிகளுக்கு நாம் சேமித்து வைக்கும் ஒரு செல்வமாக செம்மரத்தை மதித்து இந்த அரிய மரத்தை வளர்ப்பது செந்தமிழர்களின் கடமை ஆகும்.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.