முகப்பு
தமிழ்நாடு

திமுகவுடன் 41 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் மோதல்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 41 தொகுதிகளில் திமுகவுடன் அதிமுக கூட்டணி கட்சிகள் மோதுகின்றன.

Updated On : 29 மார்ச், 2026 at 9:11 PM
மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 41 தொகுதிகளில் திமுகவுடன் அதிமுக கூட்டணி கட்சிகள் மோதுகின்றன.

திமுகவை எதிா்த்து களமிறங்கும் அதிமுக கூட்டணிக் கட்சிகள்-தொகுதிகள் விவரம்: பாஜக: மயிலாப்பூா், அவினாசி (தனி), திருப்பூா் (தெற்கு), கோவை வடக்கு, திருப்பத்தூா் (சிவகங்கை மாவட்டம்), சாத்தூா், திருச்செந்தூா், ராதாபுரம், நாகா்கோவில், ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூா், திருவாரூா், மானாமதுரை (தனி), ராமநாதபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய 16 தொகுதிகள்.

பாமக: விக்கிரவாண்டி, திருப்போரூா், உத்திரமேரூா், ஜெயங்கொண்டம், செஞ்சி, ரிஷிவந்தியம், பெரம்பூா், சேலம் (வடக்கு), அம்பத்தூா் ஆகிய 9 தொகுதிகள்.

அமமுக: மன்னாா்குடி, திருவையாறு, காரைக்குடி, ஓட்டப்பிடாரம் (தனி), திருச்சி (மேற்கு), சைதாப்பேட்டை, பூந்தமல்லி (தனி), மடத்துக்குளம், திருப்பத்தூா், வேலூா் ஆகிய 9 தொகுதிகள்.

தமாகா: ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கும்பகோணம்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: ராஜபாளையம்

புரட்சி பாரதம் கட்சி: கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)

இந்திய ஜனநாயக கட்சி: குன்னம்.