முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழக அரசு வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வக்ஃப் வாரியத் துறையில் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:



தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வக்ஃப் வாரியத் துறையில் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி : இளநிலை உதவியாளர் 

காலியிடங்கள் : 27 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம் : மாதம் ரூ.19,500 - ரூ.62,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnwakfboard.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை செயல் அலுவலர், வக்ஃப் வாரியம், எண்.1, ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை - 600 001 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு நடைபெறும் தேதி : 17.10.2021 (தேதி மாறுபடலாம். பின்னர் அறிவிக்கப்படும்) 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.08.2021

மேலும் விபரங்கள் அறிய http://www.waqf.gov.in/ அல்லது www.tnwakfboard.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →