வேலைவாய்ப்பு

இதோ அரிய வாய்ப்பு... இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

திருச்சி மாவட்டம்‌, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்டம்‌, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: இந்து சமய அறநிலையத்துறை

மொத்த காலியிடங்கள்: 13 

பணி: தட்டச்சர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,600 வழங்கப்படும்.

பணி: கணினி இயக்குநர் - 01 
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500 வழங்கப்படும்.

பணி: தூய்மை பணியாளர் - 10 
சம்பளம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500 வழங்கப்படும்.

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் துறையில் பட்டம், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : வேலை நாள்களில் கோயிலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2021 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக் கோட்டை, திருச்சி -2   

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளி கூட்டுச் சாலையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

பெட்ரோல் நிரப்பும் மைய ஊழியா் மா்ம மரணம்

செண்பகப் பூ... ஷ்ரேயா கோஷல்!

இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்

SCROLL FOR NEXT