வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - Border Roads  நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்டர் ரோட்ஸ் விங் நிறுவனத்தின் எல்லைப்புற சாலை அமைப்பு பணிகளில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தினமணி


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்டர் ரோட்ஸ் விங் நிறுவனத்தின் எல்லைப்புற சாலை அமைப்பு பணிகளில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.02/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Multi Skilled Worker(Painter)
காலியிடஙகள்: 33
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயிண்டிங் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Multi Skilled Worker(Mess Waiter)
காலியிடங்கள்: 12
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 25வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Vehicle Mechanic
காலியிடங்கள்: 293
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 63,200 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Driver Mechanical Transport(OG)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200  வழங்கப்படும். 
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Commandant, GREF, CENTRE, Dighi, Camp, Pune - 411 015

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.01.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.bro.gov.in/WriteReadData/linkimages/8241967746-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT