வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா? டிப்ளமோ முடித்தவர்களை டெக்னிக்கல் உதவியாளர் வேலைக்கு அழைக்கிறது இந்திய இயற்பியல் ஆய்வகம்!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணியிடங்கள்: கர்நாடகாவில் பெங்களூரு, கவுரிபிடானுார், தமிழகத்தில் கொடைக்கானல், காவலுார், லடாக்கில் லே.
மொத்த காலியிடங்கள்: 13
பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்) - 04
பணி: ஜூனியர் ரிசர்ச் அசிஸ்டென்ட் (அப்சர்வேசன்) - 06
பணி: மெக்கானிக் - 01
பணி: இன்ஜினியர் டிரெய்னி - 01
பணி: ரிசர்ச் டிரெய்னி - 01 

தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, இயற்பியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: இன்ஜினியர் டிரெய்னி, ரிசர்ச் டிரெய்னி பணிக்கு 26க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில்  சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiap.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.iiap.res.in/job.htm/?q=job_postings என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT