வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை
தமிழக குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை வேண்டுமாதமிழக குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Tamil Nadu Slum Clearance Board
காலியிடங்கள்: 53
Advertisement
பணி: Office Assistant
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.12.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnscb.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Chairman, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Triplicane, Chennai – 600 005”.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 31.01.2021
மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.