வேலைவாய்ப்பு

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நிர்வாக அதிகாரி (பொது)

காலியிடங்கள்: 300

சம்பளம்: மாதம் ரூ.32,795 - 62,315

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT