வேலைவாய்ப்பு

இளநிலை பொறியாளர் தேர்வு-2022: எஸ்எஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய பணிக்காக காத்திருக்கும் பொறியியல் இளைஞர்களுக்கான வாய்ப்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் பணிக்காக கவனம் செலுத்தி வரும் இளைஞர்கள் இதுபோன்ற மத்திய அரசு தேர்வுகள் மீதும் கவனம் செலுத்தி முயற்சித்தால் வெற்றியடையலாம். 

விளம்பர எண். HQ-PRII03(2)/2/2022-PP-II

பணி: இளநிலை பொறியாளர் (Junior Engineer)

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I - கொள் குறிவகை கேள்விகளும், தாள் II - விரிவாக விடையளிக்கும் வகையான கேள்விகளும் கொண்டதா இருக்கும். 

எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2022

மேலும் விவரங்கள் அறிய www.sss.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT