வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சம் சம்பளத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பிளானர் மற்றும் பிளானிங் உதவியாளர் கிரேடு-I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பிளானர் மற்றும் பிளானிங் உதவியாளர் கிரேடு-I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க நாளை(ஜன.3) கடைசி நாளாகும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Planner
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி: Planning Assistant Grade-1
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: Town and Country planning பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Civil on Highways -இல் பிஇ, பி.ஆர்க் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது LCE அல்லது DCE அல்லது
D.Arch முடித்து குறைந்தது 4 அல்லது 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சென்னையில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cmdachennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.01.2022

மேலும் விவரங்கள் அறிய www.cmdachennai.gov.in அல்லது https://tncmda.onlineregistrationform.org/TNCMDADOC/Notification_AP_PA_I.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT