வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..?- ரூ.35,000 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  நிரப்பப்பட உள்ள தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கான ஆசிரியர் பணிக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  நிரப்பப்பட உள்ள தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கான ஆசிரியர் பணிக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: தவில், நாதஸ்வர ஆசிரியர்   

சம்பளம்: மாதம் ரூ. 35,000

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் தவில், நாதஸ்வர பள்ளிகளில் மூன்றாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 
வாத்யவிசாரதா சான்றிதழ் வைத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று பெற்றுக் கொண்டு தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  16.02.2022 

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT