வேலைவாய்ப்பு

வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி


வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 24

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: வருமான வரி இன்ஸ்பெக்டர் - 01
வயதுவரம்பு: 18.4.2022 தேதியின்படி, 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: வரி உதவியாளர் - 05
பணி: எம்டிஎஸ் -  18 
வயதுவரம்பு: 18.4.2022 தேதியின்படி, 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள், இளநிலைப்பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விளையாட்டு தகுதி: கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கிரிக்கெட், கபடி, செஸ், தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டு பிரிவுகளில் சர்வதேச, தேசிய, பல்கலை, கல்லுாரி, பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, விளையாட்டு சான்றிதழ், தட்டச்சு பயிற்சி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  https://incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), I SI Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.04.2022 

மேலும் விவரங்கள் அறிய https://incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT