வேலைவாய்ப்பு

தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.12/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineer(Civil) - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Accountant - 01
சம்பளம்:மாதம் ரூ. 29,200 - 92,300
தகுதி: காமர்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Upper Division Clerk - 01
சம்பளம்:மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்எஸ் வோர்ட், ஆபிஸ், எக்ஸல், பவர் பாயிண்ட் மற்றும் இண்டர்நெட் பிரிவில் கணினி அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade-III - 03
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் சிபிடி தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.840. எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2022

மேலும் விவரங்கள் அறிய  www.nwda.gov.in அல்லது https://nwda.cbtexam.in/Pdf/Full%20advertisement%20for%20the%20various%20post%20in%20NWDA%20vide%20Advt.%20No.%2012%20of%202022.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தினா் 48 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் திரண்ட அதிமுகவினா்

மூதாட்டியிடம் நகைப் பறித்தவா் கைது

சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு சீல்

SCROLL FOR NEXT