இளநிலை பொறியாளர் வேலை வேண்டுமா? 168 காலியிடங்கள்!
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer(Civil)
காலியிடங்கள்: 99
Advertisement
Advertisement
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Overseer
காலியிடங்கள்: 69
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.8.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி, பிசிஎம் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு புதுச்சேரியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.8.2024
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.