கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி கழக ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், செவிலியர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Nurse/A
காலியிடங்கள்: 27
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900
தகுதி: செவிலியர் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிப்பளமோ நர்சிங் தேர்ச்சி பெற்று செவிலியர் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant
பிரிவு: Pathology
காலியிடங்கள்: 6
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்எல்டி-இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Radiography
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ரேடியோகிராபி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Nuclear Medicine Technologist
காலியிடங்கள்: 4
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் நியூக்கிளியர் மெடிசன் டெக்னாலஜி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.29,200
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியிடன் பார்மஸி பிரிவில் டிப்ளமோ முடித்து 3 மாத பயிற்சி முடித்து பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Technician/B
பிரிவு: Orthopaedic Technician - 1
பிரிவு: ECG Technician - 1
பிரிவு: Cardio Sonography Technician - 1
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: செவிலியர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.200, இதர பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.igcar.gov.in/recruitment.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு வரும் 8.7.2024 ஆம் தேதிக்குள் விரைவு, பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அஞ்சல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்படவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Personnel Officer, Recruitment Section, 3rd Floor, Homi Bhabha Buiding, Indira Gandhi Centre for Automic Research, Kalpakkam, Chengalpattu District, Tamilnadu - 603 102
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.