நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்  
வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 18/ 2024

பணி: Executive Engineer

மொத்தா காலியிடங்கள்: 160

பாட வாரியான காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல் - 89

2. எலக்ட்ரிக்கல் - 41

3. சிவில் - 30

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் அல்லது அதற்கு இணையான துறைகளில் ஏதாவதொன்றில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? | வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

வயதுவரம்பு: 1.1.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 36-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு விவரம் மின்னஞ்சல் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினனர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரூ.354, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.854 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT