வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 
வேலைவாய்ப்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகள் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: கிராம உதவியாளர்

காலியிடங்கள்: 105

சம்பளம்: மாதம் ரூ.11,100 - 35,100

தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்கும் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி, இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 21-லிருந்து 32-க் குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://salem.nic.in இணையதளத்தில் கொடுக் கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ கீழ்க்கண்டமுகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வட்டாட்சியர் அலுவலகம், சேலம் வட்டம், சேலம் மாவட்டம்.

நேர்முகத்தேர்வு நடை பெறும் நாள்: 6.10.2025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.8.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited for the post of Village Assistant in the Salem District.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

SCROLL FOR NEXT