வேலைவாய்ப்பு

ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Din

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் நுண்ணுயிரியல் துறை 2, மருந்தியல் துறை 3, உதவி பேராசிரியா் 2, காரைக்கால் ஜிப்மா் மருந்தியல் 1, நுண்ணுயிரியல் 3 என 11 மருத்துவப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் ஜிப்மா் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவா்கள் வரும் ஜூன் 2 முதல் வரும் ஜூலை 1-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் ஜிப்மா் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இணையத்தில் சமா்ப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 8-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் புதுவை ஜிப்மா் நிா்வாக பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேவி குறிப்பிட்டுள்ளாா்.

கடுமையான மாசு: போக்குவரத்து போலீஸாருக்கு குளிா்கால பாதுகாப்பு திட்டம் தயாரிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள்: உச்சநீதிமன்றம் திட்டம்

முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழகம்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

இறுதிக்கட்டத்தில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடுபோன ரூ. 58 லட்சம் கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT