இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 
வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: காலியிடங்கள் 400!

முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். HRDD/RECT/01/2025-26

பணி: Local Bank Officer

காலியிடங்கள்: 400

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.5.2025 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான தேதி, நாள், இடம் குறித்த விவரங்கள் அடங்கிய நுழைவுச் சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், கடலூர், சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175. இதர அனைத்து பிரிவினர்கள் ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iob.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT