மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மருத்துவ மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவி மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் நர்சிங் உதவியாளர் என 6 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பதவி: மருத்துவர் (Medical Officer)
காலியிடங்கள்: 2
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200
பதவி: உதவி செவிலியர்( Staff Nurse)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: ஏஎன்எம் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
பதவி: நர்சிங் உதவியாளர்( Nursing Assistant)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு அனுப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளமான http://melmalayanurangalamman.hrce.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர்(ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் - 604 204
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 24.11.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.