திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட் உள்ள விஞ்ஞானி, பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: VSSC-336
பணி: விஞ்ஞானி, பொறியாளர் (Scientist, Engineer)
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல்(மெக்கானிக்), விண்வெளி பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Mechanical Engineering/ Aerospace Engineering பாடப்பிரிவில் B.E/B.Tech.பட்டம் பெற்று பயன்பாட்டு இயக்கவியல் (Applied Mechanics) பிரிவில் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: விஞ்ஞானி, பொறியாளர் (Thermal Engineering)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,000
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல்(மெக்கானிக்), விண்வெளி பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து வெப்ப சக்தி (Thermal Power) பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: விஞ்ஞானி, பொறியாளர் (உலோகவியல்) Metallurgy)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 56,100
வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உலோகவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் Metallurgical, Material பிரிவில் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: விஞ்ஞானி, பொறியாளர் (Control Engineering)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து Control Engineering, Instrumentation Engineering பிரிவில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: விஞ்ஞானி, பொறியாளர் (Chemical Industrial Safety)
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.56,000
வயது வரம்பு: 30- க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் வேதியியல், இயந்திரவியல், உற்பத்தி, உலோகவியல் (Chemical, Mechanical, Production, Metallurgy) பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து மற்றும் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் தொழில்நுட்ப அறிவு, பொது விழிப்புணர்வு, தொடர்பு திறன் ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும்.
நேர்முகத் தேர்வு குறித்த முழு விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இக்கட்டணத்தை பரத்கோஷ்(BHARATKOSH Payment)-கீழ் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்விற்கு வரும் பெண்கள் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணமும் திருப்பித் தரப்படும். இதர பிரிவினர்களுக்கு ரூ.500 திருப்பித் தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.10.2025
மேலும் முழு விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.