தேனி மாவட்டத்தின் தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: கிராம உதவியாளர்(Village Assistant)
காலியிடங்கள்: 25
தாலுகா வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் விபரம்:
* தேனி - 4
* போடிநாயக்கனூர் - 2
* பெரியகுளம் -10
* உத்தமபாளையம் - 9
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழை ஒரு பாடமாக கொண்டு தேர்வை எழுதியிருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள கிராமம் அல்லது தாலுகா வட்டங்களில் நிரந்தரமாக வசிப்பராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 35,100
வயது வரம்பு: 1.8.2025 தேதியின்படி பொதுப்பிரிவினர் 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர்கள், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் தகுதி, இதர சான்றுகள் சரிபார்க்கப்படும். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.theni.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சலே மூலாகவோ அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல் ஆவணங்கள்:
இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆதார், குடும்ப அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வித்தகுதி சான்று, பிறப்புச் சான்று, ஆதரவற்ற விதவைக்கான சான்று, மாற்றுத்திறனாளிக்கான சான்று, முன்னாள் ராணுவத்தினராக இருப்பின் அதற்கான அடையாள சான்று, இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 23.9.2025
மேலும் விவரங்கள் அறிய கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.