தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள உதவி மருத்துவ அலுவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
அறிவிப்பு எண். : 13/MRB/2025
பணி: Assistant Medical Officer (Ayurveda)
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.2,05,700
வயதுவரம்பு: 1.7. 2025 தேதியின்படி 37-க்குள் இருக்க வேண்டும் . எஸ்சி, எஸ்டி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
தகுதி: Ayurveda(HPIM/GCIM/LIM), B.A.M.S. தேர்ச்சியுடன் Central Board of Indian Medicine, Tamilnadu Indian Medicine இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ் தகுதித் தேர்வு, கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும். கணினி வழித் தேர்வில் ஆயுர்வேத பாடப்பிரிவிலிருந்து கொள்குறிவகை கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில் அமைந்திருக்கும். தமிழ்மொழி திறன் தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படை யில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பொது பிரிவினர் ரூ.1,000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.9.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.