தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அமைப்பான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பயிற்சியாளர்(Coach)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,30,800
தகுதி: ஏதொவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும் தேசிய விளையாட்டு நிறுவனம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் குறைந்தபட்சம் 10 மாதங்கள் கால அளவுள்ள விளையாட்டுப் பயிற்சியில் ஓராண்டு டிப்ளமோ, சான்றிதழ் அல்லது தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பயிற்சியில் முதுகலை டிப்ளமோ அல்லது குவாலியரில் உள்ள லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் விளையாட்டுப் பயிற்சியில் முதுகலை டிப்ளமோ மற்றும் விண்ணப்பிக்கும் துறையில், தேசியப் பள்ளி விளையாட்டு கூட்டமைப்புப் போட்டிகள் அல்லது அந்தந்த தேசியக் கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் இளையோர் அல்லது மூத்தோர் நிலையிலான தேசிய சாம்பியன்ஷிப், போட்டிகள் அல்லது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2026 தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தொழில்முறைத் தகுதி மற்றும் பயிற்சி அனுபவங்கள், விளையாட்டுத் துறையில் பெற்ற பதக்கங்கள், விளையாட்டு குறித்த பொது அறிவு, தமிழில் தகுதி பெற குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.sdat.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.1.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.