தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில் பழகுநர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Graduate Apprentice
பிரிவு: Mechanical, Automobile Engineering
தகுதி: மேற்கண்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 18
உதவித் தொகை: மாதம் ரூ. 9,000
பயிற்சி: Technician Apprentice
பிரிவு: Mechanical, Automobile
தகுதி: மேற்கண்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 61
உதவித் தொகை: மாதம் ரூ.8,000
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய முழு விவரங்களை 16.11.2022 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் 30.11.2022 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் www.boat-srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி குறித்த விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
மேலும், ஏதாவது சந்தேகங்களுக்கு விளக்கம் காண tncop@boat.srp.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.