சிவில் முடித்தவர்களுக்கு வாய்ப்பு... 1083 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
Applications are invited from eligible candidates only through online mode up to 04.03.2023 for direct recruitment to the posts included in the Combined Engineering Subordinate Services Examination.
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு மார்ச் 4 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 794
பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 236
பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 18
பணி: வரைவாளர் நிலை.III
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400
பணி: முதலாள்.நிலை.II
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 32, 37 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.3.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.