கோப்புப் படம். 
அரசுப் பணிகள்

விண்ணப்பிக்கலாம் வாங்க... உதவித்தொகையுடன் மெட்ரொ ரயில்வேயில் தொழில் பழகுநர் பயிற்சி!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினமணி


இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/23/Metro Raiway/Kolkata

பயிற்சியின் பெயர்: தொழில்பழகுநர் பயிற்சி  (Trade Apprentice)

மொத்த காலியிடங்கள்: 125

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 81
2. Electrician - 2 
3. Machinist - 9 
4. Welder - 9 

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சியின்போது கொல்கத்தா மெட்ரோ ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை குறுக்கு கோடிட்ட ஐபிஓ-ஆக செலுத்த வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mtp,indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இனைத்து மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

SCROLL FOR NEXT