இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்ப அமைச்சகத்தின் கீழுள்ள பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (பிஇசிஐஎல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Software Tester
காலியிடங்கள்: 1
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 75,000
தகுதி: IT, Computer Science பிரிவில் B.Tech., M.Tech., M.Sc தேர்ச்சியுடன் குறைந்தது 2 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Start-up Fellow
காலியிடங்கள்: 3
வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் ரூ.885. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.531 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.03.2023
கூடுதல் விவரங்களுக்கு khuswindersingh@becil.com/sanyogita@becil.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.