அரசுப் பணிகள்

வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைகள் அறிவிப்பு!

தினமணி


பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Junior Engineering  Assistant(Group IV)
காலியிடங்கள்: 465
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
வயது வரம்பு: 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கண்ரோல் போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Quality Control Analyst(Group IV)
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ.25,000 -1,05,000
வயது வரம்பு: 18 முதல் 26 க்குள் இருக்க வேண்டும்
தகுதி: இயற்பியல், வேதியியல், தொழிலக வேதியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Engineering Assistant(Group IV) (Fire and Safty)
காலியிடங்கள்:  14
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
வயது வரம்பு: 18  முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்  தீ மற்றும் பாதுகாப்புப்பிரிவில் துணை அலுவலர் பயிற்சி முடித்திருப்பதுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 165 செ.மீட்டர் உயரமும், 50 கிலோ எடையுடன், மார்பக அளவு சாதாரண நிலையில் 81 செ.மீ. அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ அகலம் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

பணி: Junior Material Assistant,Junior Technical Assistant(Group -IV)
காலியிடங்கள்:  4
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
வயது வரம்பு:  18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் 3 ஆண்டு  டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Nursing Assistant (Group IV)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
வயது வரம்பு: 18  முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.150. இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.03.2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT