உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்த அக்யூஸ்ட் 25வது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான திரைப்படம் அக்யூஸ்ட்.
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் 'அக்யூஸ்ட்' படக்குழு மரியாதை செலுத்தினர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து வெற்றிகரமாக நடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.