எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா
மதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மதுரை – பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தஞ்சாவூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவுகளையும் திறந்து வைத்தார். இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.