கடுங்குளிருக்கு மத்தியில் காஷ்மீர் மக்கள் இன்று காலை கண்விழித்தபோது, மிக ரம்மியமான பனிப்பொழிவில் மனம் மகிழ்ந்திருப்பர்.
பகிர்:
வெள்ளைப் போர்வை போர்த்திய பகுதியாக மாறியது காஷ்மீர்.இந்த ஆண்டின் குளிர்காலத்தில் முதல் பனிப்பொழிவு காஷ்மீரில் இன்று ஏற்பட்டது.பனிப்பொழிவு காரணமாக உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியிருப்பதற்கு, சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால், இனி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும், பொதுமுடக்கத்தால் முடங்கிய வாழ்வாதாரம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.பனிமழை பெய்த பகுதிகள் அனைத்தும் வெள்ளை வெளேர் என்று காட்சியளிக்கிறது.முதல் முறையாக காஷ்மீர் வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளும், பனிமழையைக் கண்டு உற்சாகம் அடைந்தனர்.பனிமழைக்கு இடையே தால் ஏரி.பல சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளது.காஷ்மீர்.. வெள்ளை வேளேரென காட்சி தரும் காஷ்மீர்.