பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
ஒடிசா மாநிலம் பூரியை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவத்தை கடல் சிப்பிகளை கொண்டு உருவாக்கியுள்ளார்.பாட்னாவில் பிரதமர் மோடியின் படத்துக்கு பால் அபிஷேகம் செய்த பாஜகவினர்.பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் பிரதமர் மோடியை வாழ்த்தி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கையெழுத்திட்டார்.கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்திய மிக வலிமையான தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.